Tuesday, August 26, 2014

இந்திய அரசின் அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான Postal Assistant, Sorting Assistant, Postman, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, July 30, 2014

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
                                   
இதுகுறித்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

மேலும், நடப்பு கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

ஆயிரம் பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்ற தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும்.

கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன. இந்தக் கழிவறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Tuesday, July 29, 2014

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 251 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
                              
பணியிடங்கள் விவரம்:

1. அசிஸ்டென்ட் மேனேஜர் (இன்டஸ்ட்ரி): 67 இடங்கள் (ஸ்கேல் - 1). 

சம்பளம்: 

ரூ.14,500 - 25,700. 

வயது: 

21 லிருந்து 30க்குள். 

தகுதி: 

எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ டெக்ஸ்டைல்/ கெமிக்கல்/ மெக்கானிக்கல்/ புரொடெக்சன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.டெக். பட்டம்.

2. மேலாளர்: (கிரெடிட்/ ரிஸ்க்/ மனிதவளம்/ மார்க்கெட்டிங்): 90 இடங்கள். (ஸ்கேல் - 2) 

சம்பளம்: 

ரூ.19.400 - 28,100 

வயது: 

21 லிருந்து 35க்குள். 

தகுதி: 

ஐஐஎம் அல்லது எக்எல்ஆர்ஐ மேலாண்மை கல்லூரிகளில் 2 வருட முழு நேர முதுநிலை டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு.

3. மேலாளர்: 40 இடங்கள்: (ஸ்கேல் - 2)

சம்பளம்: 

ரூ.19,400 - 28,100. 

வயது: 

21லிருந்து 35க்குள். 

தகுதி: 

பேங்கிங் மேனேஜ்மென்ட் பாடத்தில் 2 வருட முதுநிலை பட்டம்.

4. மேலாளர்: (திட்டம் மற்றும் பொருளாதார நிபுணர்): 18 இடங்கள். (ஸ்கேல் - 2) 

சம்பளம்: 

ரூ.19,400 - 28,100. 

வயது: 

21லிருந்து 35க்குள். 

தகுதி: 

பொருளியல்/ எக்னோமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 2 வருட முழுநேர முதுநிலை பட்டம். குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம்.

5. மேலாளர் (செக்யூரிட்டி): 11 இடங்கள். (ஸ்கேல் - 2) 

சம்பளம்: 

ரூ.19,400 - 28,100. 

வயது: 

25 லிருந்து 40க்குள். 

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் இந்திய முப்படைகள்/ துணை ராணுவப்படைகள்/ காவல் துறை பணிகளில் அதிகாரியாக 5 வருட பணி அனுபவம்.

6. மேலாளர்: (காஸ்ட் அக்கவுன்டென்ட்): 2 இடங்கள். (ஸ்கேல் - 2) 

சம்பளம்: 

ரூ.19,400 - 28,100. 

வயது: 

21 லிருந்து 35க்குள். 

தகுதி: 

ஐசிடபிள்யூஏ.

7. மேலாளர்: (கார்ப்பரேட் கம்யூனிகேசன்): 2 இடங்கள். (ஸ்கேல் - 2) 

சம்பளம்: 

ரூ.19,400 - 28,100. 

வயது: 

21 லிருந்து 35க்குள். 

தகுதி: 

இதழியல் மற்றும் மக்கள் தகவலியல் பாடத்தில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம்.

8. முதுநிலை மேலாளர்: (டிரஷரி): 4 இடங்கள். (ஸ்கேல் - 3) 

சம்பளம்: 

ரூ.25,700 - 31,500. 

வயது: 

21 லிருந்து 40க்குள். 

தகுதி: 

எம்பிஏ/ சிஏ/ ஐசிடபிள்யூஏ ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தகுதி. 3 வருட பணி அனுபவம். டிரஷரி/ போரக்ஸ் டீலிங் துறைகளில் பணி அனுபவம்.

9. முதுநிலை மேலாளர்: (இடர் மேலாண்மை): 3 இடங்கள் (ஸ்கேல் - 3). 

சம்பளம்: 

ரூ.25,700 - 31,500. 

வயது: 

21 லிருந்து 40க்குள். 

தகுதி: 

சிஏ அல்லது எம்பிஏ (நிதி) படிப்பை முடித்து இடர் மேலாண்மை பிரிவில் 3 வருட பணி அனுபவம்.

9. முதுநிலை மேலாளர்: (இடர் மேலாண்மை): 3 இடங்கள் (ஸ்கேல் - 3). 

சம்பளம்: 

ரூ.25,700 - 31,500. 

வயது: 

21 லிருந்து 40க்குள். 

தகுதி: 

சிஏ அல்லது எம்பிஏ (நிதி) படிப்பை முடித்து இடர் மேலாண்மை பிரிவில் 3 வருட பணி அனுபவம்.

10. தலைமை மேலாளர்: (கிரெடிட்): 10 இடங்கள். (ஸ்கேல் - 4) 

சம்பளம்: 

ரூ.30,600 - 36,200 

வயது: 

21 லிருந்து 40க்குள். 

தகுதி: 

சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் சிஏ/ எம்பி (நிதி)/ வணிக மேலாண்மை, வணிக நிர்வாகம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை டிப்ளமோ. 5 வருட பணி அனுபவம்.

11. தலைமை மேலாளர் (பொருளியல்): 2 இடங்கள். (ஸ்கேல் - 4) 

சம்பளம்: 

ரூ.30,600 - 36,200. 

வயது: 

21 லிருந்து 40க்குள். 

தகுதி: 

பொருளியல்/ எக்னோமெட்ரிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.

12. தலைமை மேலாளர் (சார்டட் அக்கவுன்டென்ட்): 1 இடம். (ஸ்கேல் - 4) 

சம்பளம்: 

ரூ.30,600 - 36,200. 

வயது: 

21 லிருந்து 40க்குள். 

தகுதி: 

பிகாம் படிப்புடன் சிஏ. குறைந்தது 5 வருட பணி அனுபவம்.

13. தலைமை மேலாளர் (இடர் மேலாண்மை): 1 இடம். (ஸ்கேல் - 4) 

சம்பளம்: 

ரூ.30,600 - 36,200. 

வயது: 

21லிருந்து 40க்குள்.

தகுதி: 

சிஏ/ எம்பிஏ (நிதி). எம்பிஏ படிப்பில் இடர் மேலாண்மை பாடத்தை படித்திருக்க வேண்டும் மற்றும் 5 வருட பணி அனுபவம்.

இடஒதுக்கீடு:

ஸ்கேல் - 1: மொத்த இடங்கள் - 67 (பொது - 34, ஒபிசி - 18, எஸ்சி - 10, எஸ்டி - 5).
ஸ்கேல் - 2: மொத்த இடங்கள் - 163 (பொது - 83, ஒபிசி - 44, எஸ்சி - 24, எஸ்டி - 12).
ஸ்கேல் - 3: மொத்த இடங்கள் - 7 (பொது - 5, ஒபிசி - 1, எஸ்டி - 1).
ஸ்கேல் - 4: மொத்த இடங்கள் - 14 (பொது - 7, ஒபிசி - 3, எஸ்சி - 3, எஸ்டி - 1).

வயது:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு 1.1.2014ன் படி வயது வரம்பு கணக்கிடப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு சலுகை உண்டு. ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.550. (எஸ்சி., எஸ்டியினர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50).

விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.7.2014.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.
                                         

அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படியும், 23-8-2010 நாளிட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவிக்கையின் அடிப்படையில் 1 முதல் 8 வகுப்பு வரை நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அரசு அதிகாரம் பெற்ற அமைப்பால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண் 60 சதவீதம் இருக்க வேண்டும் எனவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.


அரசாணை நிலை எண் 181, நாள் 15-11-2011-ன்படி தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்தும் முகவாண்மையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் 12-7-2012 அன்று தகுதித்தேர்வை நடத்தியது, இதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 448 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 0.34 சதவீதம் ஆகும்.


தேர்ச்சி விகிதம் மிக குறைந்த அளவே இருந்ததால், ஆசிரியர் தேர்வு வாரியம் 14-10-2012 அன்று துணைத் தகுதித்தேர்வினை நடத்தியது. இதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதியதில், 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2.99 சதவீதம் ஆகும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் தகுதித் தேர்வினை நடத்தியது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர்களில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 4 லட்சத்து 311 பேரில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதற்கிடையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை இடஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, அரசாணை நிலை எண் 25, பள்ளி கல்வித்துறை நாள் 6-2-2014-ல், 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைத்தும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முகமதியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய தேர்வர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்தும் ஆணை வெளியிடப்பட்டது.


முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இச்சலுகையினால் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் ஒன்றில், 17 ஆயிரத்து 996 பேர்களும், தாள் இரண்டில் 25 ஆயிரத்து 187 பேர்களும் ஆக மொத்தம் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த 29 ஆயிரத்து 518 பேர்களுடன் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 183 பேர்கள் ஆக மொத்தம் 72 ஆயிரத்து 701 பேர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என பணிநாடுநர்களால் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன.


அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் முடிவுற்ற நிலையில், தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடர் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.


தொடர்ந்து பேசிய உறுப்பினர் பாலபாரதி, ‘‘முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் தளர்வு அளித்த பிறகு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 72 ஆயிரத்து 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 10 ஆயிரம் காலி பணியிடங்களைத்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் நீதிமன்றம் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. வெயிட்டேஜ் என்று வரும்போது அதில் பிளஸ்-2 மதிப்பெண்ணும் சேர்க்கப்படுகிறது. நாம் அப்போது படிக்கும்போது பிளஸ்-2-வில் மாவட்டத்திற்கு ஒருவர் தான் அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இப்போது 200-க்கும் மேற்பட்டோர் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். எனவே, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.


அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘அரசின் விதிமுறையை மாற்றும் கோரிக்கையை உறுப்பினர் இங்கே வைக்கிறார். இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக 80 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளும் அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. வழக்குகளின் நகல்கள் பெறப்பட்டவுடன், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது’’ என்றார்.


இதுகுறித்து, கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்படும். இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்றார்.
கனரா வங்கியின் கீழ் செயல்பட்டும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான Canfin Homes Limitsd -ல் காலியாக Junior Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
                               
பணி: Junior Officer

காலியிடங்கள்: 20

பணியிடங்கள் விவரம்:

1. Karnataka

2. Tamilnadu

3. Telangana

4. Maharashtra

5. NCR

6. Uttar Pradesh

7. Haryana

8. Chhattisgarh

9. Uttarakhand

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.07.2014 தேதியின்படி 25-30-க்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: முதல் 12 மாதத்துக்கு மாதம் ரூ.15,200, இரண்டாம் வருடத்திலிருந்து மாதம் ரூ.18,000, மூன்றாவது வருடத்திலிருந்து மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. இதனை CANFIN HOMES LTD என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

The Deputy General Manager – HRM, Can Fin Homes Ltd,

Registered Office: No.29/1, 3rd floor,

Sir. M N Krishna Rao Road, Basavangudi,

Bangalore- 560004, Karnataka State

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:18.08.2014

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2014 - 30.08.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, July 28, 2014

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் All India Radio நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரக் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
                            
பணி: News Reader-cum-Translator(Tamil)

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 23,000

கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.

பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: News Reader-cum-Translator (Malayalam)

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.23,000

கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு செய்யும் வேகத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் நல்ல அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225. இதனை Director General(News) AIR, New DElhi என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குரல்வளத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் தமிழ், மலையாள மொழிகளில் பெற்றிருக்கும் அறிவு, மொழி பெயர்ப்பு திறன் மற்றும் தற்போதைய நடப்புகள் போன்றவற்றிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi-110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.07.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://newsonair.nic.in/vacancy/NRT-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழக அரசின் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 139 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

                         
பணி: Assistant Professor in Engineering Colleges

பதவி கோடு: 14E

காலியிடங்கள்: 139

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. Civil - 12

02. Mechanical - 10

03. E.E.E - 07

04. E.C.E - 10

05. E.I.E - 02

06. Computer Sceience Engg - 07

07. Production Engg - 07

08. Metallurgy - 01

09. Mathematics - 25

10. English - 19

11. Physics - 21

12. Chemistry - 18

காலியிடங்கள் பகிர்வில் 20 சதவிகித இடங்கள் தமிழ் வழிக்கல்வி பயின்ரவர்களுக்கு ஒதுக்கப்படுள்ளது.. 3 சதவிகித இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் துறைக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்று NET தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு NET தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு கட்டணம்: ரூ.600. SC,ST,PH பிரிவினருக்கு ரூ.300. இதனை தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் செல்லானையே படிவத்தை பயன்படுத்தி State BanK of India, Indian Overseas Bankல் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான (TRB's)செல்லான் நகலை தனியாக ஒரு கவரில் வைத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான (TRB's)செல்லானை இணைத்து அந்தந்த தலைமை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கொடுத்து அதற்கான ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி: 05.09.2014

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 26.10.2014

நேர்காணல்: இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஆகஸ்ட் 8 ஆம் தேதி நேர்காணல் தொடங்கும் என்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் (ஜூலை) 18 ஆம் தேதி வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www. trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.